mardi 28 août 2012

புலவரில் சிறந்தவா்


எடுப்பு

புலவரிற் சிறந்தவர் இலக்குவனார்! – அவர்
பூந்தமிழ்க் கண்டெனப் பலபுகழ்வார்!
                                  (புலவரில்)

தொடுப்பு

இலக்கிய இலக்கணக் காவலராம்! – அவர்
இன்தமிழ்ப் பேச்சினில் நாவலராம்!
                                  (புலவரில்)

முடிப்பு

திருக்குறள் தெளிவுரை திறம்பட வடித்தார்! – உயர்
தென்மொழி ஆய்வுகள் தேனெனக் கொடுத்தார்!
நெருக்கற நுழைந்திடும் இந்தியைத் தடுத்தார்! – நம்
நிலத்திடைச் செந்தமிழ் நிலவிடத் துடித்தார்!
                                  (புலவரில்)

களிதமிழ் கமழ்ந்திடக் கருத்துகள் மொழிந்தார்! – தொல்
காப்பியம் மணந்திடக் கனியுரை பொழிந்ததர்!
தெளிதமிழ் உயர்ந்திடச் சிந்தையில் விழைந்தார்! – நம்
செம்மொழி காத்திடச் சிறைதனில் நுழைந்தார்!
                                  (புலவரில்)

Aucun commentaire:

Enregistrer un commentaire