பூங்காற்றுத் திரும்புமா?
எடுப்பு!
பூங்காற்றுத் திரும்புமா - இனிப்
புதுவாழ்வும் அரும்புமா?
(பூங்காற்று)
தொடுப்பு
தீங்கெல்லாம் தீருமா - இன்பத்
தேன்வந்து
சேருமா?
(பூங்காற்று)
முடிப்பு
வேண்டாத சாத்திரங்கள்
சாயுமா - மனம்
விரும்பாத வேற்றுமைகள்
மாயுமா?
தீண்டாமை எனும்கொடுமை
ஓயுமா - உயர்
சீரோங்கும் பொதுநலம்
பாயுமா?
(பூங்காற்று)
கல்லாமை இல்லாமற்
போகுமா - பெருங்
கருணைமழை கரைபுரள
ஏகுமா?
இல்லாமை இல்லாமை
காணுமா - வாழ்வும்
இனிதாகும் நல்லறங்கள்
பூணுமா?
(பூங்காற்று)
பெண்ணாசை மனம்விட்டே
அழியுமா - காணும்
பெண்ணடிமை நிலம்விட்டே
ஒழியுமா?
பொன்னாசை நமைவிட்டே
கழியுமா - நம்
பொதுவுடைமை உலகெங்கும்
பொழியுமா?
(பூங்காற்று)
11.02.2016