mardi 1 avril 2014

கவிதைக் காவலன்!





கவிதைக் காவலன் 

எடுப்பு

கன்னல் கவிவடித்த கண்ண தாசனே - உயர்
கற்பனைக் கடல்குளித்த கம்ப நேசனே!
                                         (கன்னல்)

தொடுப்பு

வண்ணம் பலதொடுத்த கவிதை மன்னனே - நல்ல
பண்ணில் மதுகலந்த காதல் கண்ணனே!
                                         (கன்னல்)

முடிப்பு

ஒப்பிலாத் திரையிசையில் ஒளிர்ந்தவன்..நீ - கவி
ஓதுவார் உள்ளத்துள் பொலிந்தவன் ..நீ!
தப்பிலாக் குறள்விளக்கம் மொழிந்தவன்..நீ - இங்குத்
தண்டமிழ் அமுதினையே பொழிந்தவன்..நீ!
                                         (கன்னல்)

காதல்தரும் இசையினிலே கமழ்ந்தவன்..நீ - கற்
கண்டெனக் கவியெழுதி மகிழ்ந்தவன்..நீ!
போதைதரும் சீர்களையே புனைந்தவன்..நீ - நாளும்
பொன்மழைத் தமிழினிலே நனைந்தவன்..நீ!
                                         (கன்னல்)
01.04.2014


1 commentaire:

  1. வணக்கம்!

    சொக்குப் பொடியுடைய சொற்கலந்து பாப்படைத்தார்!
    திக்கெட்டும் செந்தமிழ்த் தோ்விடுத்தார்! - செக்குச்
    சுழல்வதுபோல் சுற்றுகிறேன்! இன்கண்ண தாசா்
    குழலிசைப் பாவைக் குடித்து!

    RépondreSupprimer